ஓமம் நமது உடலுக்கு எத்துனை நன்மைகள் செய்கிறது?.! இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!!  - Seithipunal
Seithipunal


பொதுவாக நமக்கு ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய பெரும்பாலும் மருத்துவமனையை நம்பித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எளிமையான வீட்டு மருத்துவத்தின் மூலமாகவே பெரும்பாலான பிரச்சனையை வீட்டில் இருந்தவாறு சரி செய்யலாம். எந்த நேரமும் ஏற்படும் வாயு பிரச்சனை., செரிமான பிரச்சனை., வலி வீக்கம் மற்றும் வயிற்று கோளாறு என்று அனைத்து பிரச்சனையையும் சரி செய்ய உதவும் ஓமத்தின் நன்மைகள் குறித்து இனி காண்போம். 

ஓமம் இயற்கையாகவே தன்னுள் பல அற்புதமான நன்மைகளை கொண்டது. சிறுநீரை பெருக்கும்., வாயுவை வெளியேற்றும்., செரிமானத்தை தூண்டும்., இதய நலத்திற்கு அதிகளவு பலம்., வயிற்று புண்கள் பிரச்சனையை சரி செய்தல்., உடல் மற்றும் மனதிற்கு அமைதியை தரும். ஓமத்தை பயன்படுத்தி உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை நீக்கும் நிவாரணியை நாம் இல்லத்திலேயே செய்யலாம்... 

உடலில் ஏற்படும் வலியை நீக்கும் நிவாரணி செய்ய​ தேவையான பொருட்கள்: 

ஓமம்
விளக்கெண்ணெய்

செய்முறை:

பாத்திரத்தில் நீர் விட்டு பொடியாக இருக்கும் ஓமத்தை நீருடன் சேர்த்து நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும். இதற்கு பின் கலி பதம் வரும் வரை காத்திருந்து., பின் விளக்கெண்ணையை சேர்த்து நன்றாக கலக்கி மூட்டு மற்றும் தசையில் இருக்கும் வீக்க பகுதிகள்., அடிபட்ட காயத்தில் போட்டு வந்தால் நல்ல பலனானது கிடைக்கும். 

Tamil online news Today News in Tamil

வாயு தொல்லை நீங்க ஓமத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?:

தேவையான பொருட்கள்: 

ஓமம்., 
மோர்., 
உப்பு. 

செய்முறை: 

முதலில் சிறிதளவு மோரை எடுத்து கொண்டு கால் தே.கரண்டி ஓமம்., சிறிதளவு உப்பு சேர்த்து குடித்து வந்தால் வாயு தொல்லை., வயிறு உப்புதல் போன்ற பிரச்சனையில் இருந்து உடனடி விலக்கத்தை அளிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்குவதற்கு சரியான மருந்தாக ஓமம் செயல்படுகிறது. 

செரிமான பிரச்சனையை சரி செய்யும் ஓம பானம் தயாரிக்கும் முறை: 

தேவையான பொருட்கள்: 

ஓமம்., 
சுக்கு., 
மிளகு., 
திப்பிலி., 
ஏலக்காய்., 
பணங்கற்கண்டு. 

Tamil online news Today News in Tamil

செய்முறை: 

சிறிதளவு சுக்கு மற்றும் 10 மிளகு., திப்பிலி., ஏலக்காயை எடுத்து சிறிதளவு ஓமத்துடன் சேர்த்து நசுக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர் இந்த கலவையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் வயிறு கோளாறுகள் சரி செய்யப்பட்டு., செரிமானம் தூண்டப்பட்டு வயிற்றுப்போக்கு மற்றும் காலரா பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. 

இதுமட்டுமல்லாது ஓமம் உமிழ்நீரை சுரக்க வைத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. வயிறு கோளாறு., உடல் வீக்கம்., புண்களை விரைவில் குணமாக்குதல்., அடிக்கடி வரும் காய்ச்சல் போன்ற பிரச்சனையில் இருந்தும் பாதுகாக்கிறது. 

காய்ச்சலில் இருந்து பாதுகாக்க ஓமத்தை பயன்படுத்தும் முறை: 

தேவையான பொருட்கள்: 

ஆடாதோடை., 
சீரகம்., 
வெட்டிவேர்., 
பனங்கற்கண்டு. 

செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட ஆடைதோசையோடு வெட்டிவேர்., சீரகம் மற்றும் பனங்கற்கண்டை சேர்த்து., நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சலானது விரைவில் குணமாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how oomam help to improve health know about it


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->