பணமோசடி வழக்கு.. முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை! - Seithipunal
Seithipunal


பணமோசடி வழக்கில் பெரு நாட்டின்  முன்னாள் அதிபர் ஒல்லாண்டா ஹுமாலாக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர்  உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

தென் அமெரிக்க நாடான பெருவில்  2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும்  முன்னாள் அதிபர் ஒல்லாண்டா ஹுமாலாதீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது  தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேசிடம் இருந்து சுமார் ரூ.2 கோடி வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடை பெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இதுதொடர்பாக முன்னாள் அதிபர் ஒல்லாண்டா, மற்றும் அவரது மனைவி ஹெரேடியா ஆகியோர் மீது  கோர்ட்டில்  நடைபெற்று வந்த பணமோசடி வழக்கின் விசாரணையில்  குற்றச்சாட்டு உறுதியானது. அதனை தொடர்ந்து  2 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ஒல்லாண்டா உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரது மனைவி ஹெரேடியா  பிரேசில் தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார். இதையடுத்து அங்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவர் தனது மகனுடன் விமானம் மூலம் பிரேசில் தப்பிச் சென்றுள்ளார். மேலும் இந்த தண்டனையை எதிர்த்து ஒல்லாண்டா ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்ய உள்ளனர். மேலும் இந்த  வழக்கில் ஹெரேடியா பிரேசிலில் இருந்து கொண்டே காணொலிக்காட்சி மூலம் ஆஜர் ஆவார் என அவரது வக்கீல் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Money laundering case Former president sentenced to 15 years in prison


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->