தூதரக பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. மூத்த பேராசிரியர் பணிநீக்கம்! - Seithipunal
Seithipunal


ஜப்பான் தூதரக பெண் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த  டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தூதரக பெண் அதிகாரி ஒருவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்காட்டார்.ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் துறையில் பணியாற்றி வந்த மூத்த பேராசிரியர் ஸ்வரன் சிங்கை சில மாதங்களுக்கு முன் அணுகியபோது தூதரக பெண் அதிகாரி  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்காட்டார்.பேராசிரியர் ஸ்வரன் சிங் மீது ஏற்கனவே இதுபோன்ற பல புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார். ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக்  இந்த புகார் உடனடியாக கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில் பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி ஓய்வுக்கு ஒரு வருடம் முன்னதாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை நடந்த ஜேஎன்யு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் உள் புகார்கள் குழு (ஐசிசி) நடத்திய விசாரணையின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Female diplomat sexually harassed Senior Professor Sacked


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->