தீராத மன அழுத்தத்தை குறைத்து.. நிம்மதியான உறக்கம் பெற இதோ தீர்வு.! - Seithipunal
Seithipunal


கருங்காலி மரத்தில் இருந்து செய்யப்பட்ட கருங்காலி பொருட்கள் அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் நீக்குகிறது. மேலும், நேர்மறை எண்ணங்களை தூண்டி உங்களுக்கு செல்வத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தேடி தரும். மேலும், வீட்டில் கருங்காலி பொருட்கள் வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.

கருங்காலி மரத்தை மக்கள் செவ்வாய் கிரகத்தின் அம்சமாக வணங்கி வருகிறார்கள். செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் தீய விளைவுகள், தோஷங்களில் இருந்து நம்மை காக்கிறது.

கருங்காலி மரத்தை பழங்காலம் தொட்டு உபயோகப்படுத்துவதன் நோக்கம், இது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சக்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், எதிர்மறை சக்தியை விலக்கி விடும் அல்லது தங்கவிடாது என்னும் நம்பிக்கை உண்டு.

கருங்காலி வளையல் :

நன்கு முதிர்ந்த கருங்காலி மரத்தின் கட்டையில் சிறு சிறு மணிகளாக மாற்றி விரிவடையும் தன்மை கொண்ட நூலால் கோர்க்கப்பட்டது தான் கருங்காலி வளையல். 27 மணிகளுடன் விரிவடையும் தன்மை கொண்ட கருங்காலி வளையலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலரும் அணிந்து கொள்ளலாம்.

இறைசக்தி அதிகமுள்ள கருங்காலி வளையலை அணிவதால் உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, மனஅமைதி ஏற்படும் என்பது முன்னோர்களின் வாக்கு.

இன்றைய சூழலில்...

வேலைக்காக... குடும்பத்தையோ, குடும்பத்துக்காக... வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதை குழப்பிக்கொள்பவர்கள் இன்று ஏராளமானோர்.

மிக அதிக சோர்வு, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, எதிலும் எரிச்சல் இருப்பினும் ஏதோ ஒரு புன்னகையை முகத்தில் போலியாக ஒட்டிக் கொள்பவர்கள் பலர்.

இதனால் கிடைப்பது பதற்றமும், மன அழுத்தமுமே!!

தீராத மன அழுத்தத்தால் இரவில் தூக்கம் வரவில்லை, மற்றவர்களுடன் சிரித்து பேச முடியவில்லை, வேலையில் கவனம் சிதறல், படிப்பில் கவனமின்மை, தொழிலில் நஷ்டத்தை சந்தித்தல் என பல்வேறு பிரச்சனைகளால் சிரமப்படுகிறீர்களா?

பதற்றம் மற்றும் அதனால் வரும் மன அழுத்தத்தை போக்கி எந்தவொரு செயலை தொடங்கினாலும் அதில் நல்ல முன்னேற்றத்திற்கான அனைத்து வழிவகைகளையும் உருவாக்கி தருகிறது கருங்காலி வளையல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to get sleep using karungali


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->