கழிவுகளை நீக்கும் எளிய நீர் பானம் - எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


உடலில் உள்ள கழிவுகளை நீக்க பல்வேறு இயற்கை முறைகள் உள்ளன. அதில், ஒன்றை இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்
வெள்ளரி பிஞ்சு 
எலுமிச்சை பழம்
இஞ்சி
சப்ஜா விதைகள்
புதினா இலைகள்

செய்முறை:-

முதலில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்து, அதில் நறுக்கிய வெள்ளரி துண்டுகள், எலுமிச்சை பழம், இஞ்சி, சப்ஜா விதைகள் மற்றும் புதினா இலைகள் என்று அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு ஓரிரவு ஊறவைக்கவேண்டும்.

மறுநாள் முழுவதும் உங்களுக்கு தண்ணீர் தேவைப்படும்போதெல்லாம் அந்த தண்ணீரை மட்டுமே பருகவேண்டும். அப்படி செய்து வந்தால் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் கடகடவென வெளியேற்றப்படும்.

இந்த தண்ணீரை பருகுவதன் மூலம் என்னென்ன நோய்கள் தீரும்?

* உடலில் சிறுநீரை பெருகச் செய்கிறது. உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. இது வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய கழிவு நீக்க பானம். இந்த பானத்தை வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை கட்டாயம் குடித்து வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare wastage remove water on body


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->