பழங்கள் மற்றும் காய்கறிகளை சூழ்ந்திருக்கும் இரசாயன நச்சுக்கள்.! இரண்டு நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


விதவிதமான ஆடைகளை அணிந்து ஆடம்பரமாக பணத்தை செலவழித்து வாழ்ந்து வந்தாலும்., நமக்கு மூன்று வேளைக்கும் உணவு தேவைப்படுகிறது. உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது அதன் மீது பூச்சிகள் தாக்காமல் இருக்க சில ரசாயனங்களை தெளிப்பது வழக்கம். 

அந்த வகையில் இன்று வரும் பெரும்பாலான பொருட்களில் ரசாயனங்கள் உள்ளன., சில பொருட்கள் ரசாயன வேதியியல் முறையில் தயார் செய்யப்பட்டு., பதபடுத்தப்பட்டு குளிர்பதன பெட்டிகளில் குளிர்பானங்கள் வருகிறது. 

அதையும் நாம் உடலுக்கு ஆபத்தானது என்று தெரிந்தே அருந்துகிறோம். அந்த வகையில்., உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மீது பூச்சிகளுக்காக ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு., அந்த ரசாயனங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மீது படர்ந்திருக்கும். 

அந்த வகை உணவுகளை நாம் கழுவாமல் அல்லது கடைகளில் வாங்கி நேரடியாக சாப்பிட்டால் நமது உடல்நலத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்சினைகளிலிருந்து தப்பித்து நாம் நமது உடல்நலத்தை எப்படி பாதுகாப்பது என்று காண்போம். 

உடல் நலத்தை பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளையும்., முயற்சிகளையும் செய்து வந்தாலும் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருந்து வரும் பிரச்சனைகளால் பெரும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இதனை தவிர்ப்பதற்காக சில வழிமுறைகள் உள்ளது., பெரும்பாலும் அன்றைய காலங்களில் யாரேனும் விஷம் அருந்திவிட்டால் அல்லது விஷக்காய் ஏதேனும் சாப்பிட்டு விட்டார்கள் என்றால் இல்லங்களில் எலுமிச்சம் பழச்சாறு அல்லது புளிக்கரைசல் அதிகளவு அவர்களின் வாயில் ஊற்றி விஷத்தின் வீரியத்தையும்., விஷத்தையும் முறிப்பார்கள்.  

அந்த வகையில் பழங்களின் மீது இருக்கும் ரசாயனப் பொருள்களின் நச்சுக்களை எப்படி முடிப்பது என்ற சிந்தனை அனைவருக்கும் இருக்கும்., வெளியில் இருந்து வாங்கி வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 அல்லது 3 நிமிடம் ஊற வைத்து சுத்தமான சாதாரண நீரில் கழுவினால் பழங்களின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் ரசாயன நச்சுப்பொருளானது வெளியேறும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in fruits and vegetables toxic Pesticides how to clean it


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->