சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: மின் மற்றும் இயந்திர அமைப்புகளுக்கான ரூ.168.16 கோடி ஒப்பந்தம்!
Chennai Metro Rail Project Rs 168 Crore Contract for Electrical and Mechanical Systems
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் II, வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்புகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாதவரம் பால் பண்ணை நிலையத்திலிருந்து கோயம்பேடு 100 அடி சாலை நிலையம் வரை அமைந்துள்ள 10 உயர்மட்ட நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் கீழ்,
- மின்சாரம்,
- தி் பாதுகாப்பு,
- காற்றோட்டம்,
- ஏர் கண்டிஷனிங் (VAC) அமைப்புகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஒப்பந்தம் M/s Jakson Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி மற்றும் M/s Jakson Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் (EPC Business) அங்கூர் கோயல், இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் இந்த அடிப்படை பணிகள் முடிவடைந்தால், கட்டம் II திட்டத்தின் செயல் திறன் அதிகரிக்கும்படி அமைக்கப்படும். இதன் மூலம் சென்னை மக்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் வணிக, தொழில், மற்றும் பொதுமக்களின் வசதிகள் அதிகரிக்கும் என மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
English Summary
Chennai Metro Rail Project Rs 168 Crore Contract for Electrical and Mechanical Systems