மதிப்பிற்குரிய அன்புத்தம்பி DyCM உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு... நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், 

மதிப்பிற்குரிய அன்புத்தம்பி துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், ஆந்திர முதலமைச்சர் நண்பர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், மற்றும் மதிப்பிற்குரிய திரு.O.பன்னீர் செல்வம், திரு.வைகோ, திருமதி.வி.கே.சசிகலா, திரு.திருநாவுக்கரசர், திரு.துரைமுருகன், திரு.அன்புமணி ராமதாஸ்,

திரு.டி.டி.வி.தினகரன், திரு.அண்ணாமலை, விஜயகாந்த், திரு.திருமாவளவன், திரு.வாசன், திரு.ஏ.சி.சண்முகம், திரு.சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், திரையுலகத்திலிருந்து நண்பர் திரு.கமலஹாசன், திரு.வைரமுத்து, திரு.S.P.முத்துராமன் அவர்கள், திரு.விஜயகுமார்,

திரு.பாலகிருஷ்ணா, திரு.ஷாருக்கான், திரு.அமீர்கான், திரு.பார்த்திபன், திரு.சத்யராஜ், திரு.தனுஷ். திரு.சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்,

அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth thanks to all Birth day wish


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->