வைரஸ் போன்ற காய்ச்சலை விரட்டும் கபசுரக் கசாயம், செய்வது எப்படி?! - Seithipunal
Seithipunal


சாதாரண காய்ச்சலுக்கு நில வேம்பு குடிநீர் பயன்பட்டுவருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் சளி,அதிக இருமல் ,தொண்டை வலி,காய்ச்சல் என்று கபம் சார்ந்த அறிகுறிகள் உள்ள கொரோனா போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு சந்தனம் ,வெட்டிவேர் ,விலாமிச்சம் வேர் போன்ற அதிக குளிர்ச்சி உள்ள நிலவேம்பு குடிநீர் எதிர்ப்பு சக்தியை அளிக்காது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேசமயம்,"கபசுர கஷாயம் என்பது மருந்து. இதை மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்" என்றும் அறிவுறுத்துகின்றனர்.

கபசுர குடிநீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்:

சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கிரகார வேர், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதொடை இலை, கற்பூரவள்ளிஇலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறு தேக்கு, நிலவேம்பு சமூலம், வட்டதிருப்பிவேர், கோரைகிழங்கு ஆகிய அனைத்து மூலிகைகளையும் சம அளவில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும் .

பத்து கிராம் கஷாயத்தை இருநூறு மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி ஐம்பது மிலியாக்கி வடிகட்டி காலை மாலை ஆகாரத்திற்கு முன் தொடர்ந்து பத்து நாட்கள் பருகி வர பன்றி காய்ச்சல் குணமாகும். தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர வைரஸ் காய்ச்சல் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திட முடியும்.

இப்போது இத்தனை மூலிகைப் பொருட்களையும் தேடி அலைவது மிகவும் கஷ்டம். எனவே கபசுர குடிநீர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக கிடைக்கிறது. மக்கள் பயன்பெற அரசு மருத்துவமனையை நாடலாம். வசதி வாய்ப்புள்ளவர்கள் அருகில் உள்ள படித்த சித்த மருத்துவரை அல்லது படித்த ஆயுர்வேத மருத்துவரை அணுகி எளிதாக பெறலாம்.

இந்த சித்த மருந்தான கபசுர குடிநீர் கொரோனா போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகவோ அல்லது வைரஸ் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு துணை மருந்தாகவோ கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க இந்த மருந்து பெரிதும் உதவும் என கூறுகின்றன ஆயுர்வேத மருத்துவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kabasura kudineer special in tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->