"உடல் எடையைக் குறைக்க ஒரு கப் கிட்னி பீன்ஸ்!" எடுத்தால் போதும்.!
Kidney Beans Using weight loss
பார்ப்பதற்கு சிறுநீரக வடிவில் இருப்பதால் இந்த வகை சிவப்பு காராமணிகளை 'கிட்னி பீன்ஸ்' என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
இதில் அதிகளவு நார்ச்சத்தும், புரதமும் அதிகளவு இருப்பதால் நம் உடலுக்கு தேவையான வலிமையைத் தருகிறது.
தாவர புரதம் அதிகளவு கிடைக்கப்பெரும் கிட்னி பீன்ஸை, உடல் எடைக் குறைக்க விரும்புபவர்கள் உடலில் உள்ள எரிச்சக்தியை மேம்படுத்தி நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணம் செய்து அதிகப்படியாக சேர்ந்திருக்கும் கொழுப்புகளை கரைக்க தினமும் உண்ணலாம்.
உடலில் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் சீராக ஆக்ஸிஜன் செல்வதற்கு இரும்பு சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றஙகள் போன்றவை நிறைந்து இருக்கக் கூடிய கிட்னி பீன்ஸை தினமும் ஒரு கப் அளவுக்கு உண்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ரத்தத்தில் எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரைட்டப்பு, இதய கரோனரி நோய் முதலியற்ற பிரச்சனைகளை வரவிடாமல் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.
கிட்னி பீன்ஸில் பாஸ்பரஸ், மேங்கனீஸ், தாதுக்கள் வைட்டமின் ஏ, சி, நிறைந்திருப்பதால் எலும்புகளுக்கும், கண்பார்வைக்கும் நன்மை பயக்கிறது.
English Summary
Kidney Beans Using weight loss