கிராம்பால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!!
kirambu Benefits
நாம் சமைப்பதற்காக பயன்படுத்தும் கிராம்பில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. கிராம்பு பல வலிகளைப் போக்குவதுடன் வாயு பிரச்சனை போன்றவற்றுக்கும் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது.
கிராம்பு எதற்கெல்லாம் மருந்தாக இருக்கிறது, எப்படியெல்லாம் பயன்ப்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம். கிராம்புப் பொடி செய்து வறுத்து அரை கிராம் தேனில் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
நான்கு கிராம் கிராம்பை எடுத்து மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்ட காய்ச்சி பருகினால் காலரா குணமாகும். சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.