200 கி.மீ சுற்றளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இடிந்து விழுந்த கட்டிடங்கள்! உயரும் பலி எண்ணிக்கை!
Earth quake in Nepal Tobat
நேபாளம் - திபெத் எல்லையில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மலை பகுதிகளான நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமானது என்றாலும் இந்த நிலநடுக்கம் 200 கி.மீ. சுற்றளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இது சக்தி வாய்ந்ததாகவும் இருந்ததாக தெரியவந்துள்ளது.
திபெத் - நேபாள எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உணரப்பட்டது. மேலும், சீனாவின் திபெத் பகுதிகள் மற்றும் நேபாளத்திலும் உணரப்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் திபெத் பகுதியில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி 32 பேர் உயிரிழந்ததாகவும் (மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது) மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சீன தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Earth quake in Nepal Tobat