கொண்டைக்கடலையை சாப்பிட்டால் இப்படிலாம் கூட நடக்குமா.?!
kondaikadalai special benefits in tamil
கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலையில் புரதம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் பல வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன.
மூக்கடலை சுண்டல் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும், உடல் உறுதியாகும்.
கடலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் சீதக் கழிச்சல் குணமாகும்.
பச்சைக் கொண்டைக் கடலையை ஊறவைத்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும் குணமாகும்
மேலும் இந்த சுண்டலை தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம்.
இங்கு ப்ரௌன் நிற சுண்டலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சுண்டலில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.
சுண்டலில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறையும். அதற்கு தினமும் 3/4 கப் ப்ரௌன் நிற சுண்டலை வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள்.
கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை உட்கொண்டு வர வயிறு பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
கொண்டைக்கடலையை லேசாக வறுத்து சாப்பிட்டு பின் பால் அருந்தி வர இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும். பச்சையாக இல்லாமல் அவித்து சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும்
வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.
English Summary
kondaikadalai special benefits in tamil