வெயில்கால தாக்கத்தில் இருந்து சிறுநீரகத்தை பாதுகாக்கும் கொத்தமல்லி தழை.! - Seithipunal
Seithipunal


சிறுநீரகத்தில் ஏற்படும் கல் போன்ற பிரச்சினைகளுக்கு எளிய தீர்வை கொடுக்கக் கூடியது கொத்தமல்லி தழை. உடம்பை தினமும் உடற்பயிற்சி, யோகா, வாக்கிங் போன்றவை செய்து வந்தாலே உடம்பில் ஏற்படும் நோய்கள் ஓரளவுக்கு கட்டுப்படும்.

மேலும், நோய்கள் வருவதையும் தடுக்கலாம். உடம்பில் உள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகமாகும். இந்த சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டாலே நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 

சிறுநீரகம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் உப்பு நீர்  போன்றவற்றை சுத்தப்படுத்தி சிறுநீர் வழியாக வெளியேற்றும். ஆனால், கோடை காலங்களில் உடம்பில் உள்ள நீர் வியர்வை வழியாக வெளியே, சென்று விடுகிறது. இதனால் வெயில் காலங்களில் அதிக தாகம் ஏற்படுகிறது மற்றும் சிறுநீரக கற்களும் ஏற்படுகிறது.

வெயில் காலங்களில் அதிக தண்ணீர் அருந்துவது அவசியம். உள்ள எளிய தீர்வு கொத்தமல்லி தழை ஒரு கப், எலுமிச்சம் பழம் இரண்டு ஸ்பூன், தண்ணீர் இரண்டு டம்ளர் சீரகம் சிறிதளவு இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கொதிக்க விடவும். 

இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் அளவு வரும் வரை கொதிக்க விட்டு பின்பு வடிகட்டி இதை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தாலே சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கக்கூடியது.

மேலும், இதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுக்கலாம்  உங்களது சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kothamalli leafs secure kidney


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->