விலை குறைவாக கிடைக்கும்.. இந்த பழங்களில் இவ்வளவு நன்மைகளா.?!  - Seithipunal
Seithipunal


ஆப்பிளில் இருக்கும் சத்துக்களை போல் விலை குறைவாக கிடைக்கும் பழங்களிலும் சத்துக்கள் அதுவும் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம். 

கொய்யாப்பழம் : 

கொய்யா பழத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில், நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை போகக் கூடியது. மற்றும் சரும பிரச்சனைகளையும் நீக்கும்.

வாழைப்பழம் : 

இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. அதிலும், நேந்திரம் பழம் மிகவும் உடலுக்கு நல்லது. நேந்திரம் பழம் தினமும் இரண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். 

இலந்தைப்பழம் : 

இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். கண்பார்வை குறைபாடு நீங்கும். வாந்தி, வயிற்று வலி போன்றவற்றை நீக்க கூடியது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பித்தப்பை கற்க்களையும் நீக்கக்கூடியது.

பப்பாளி பழம் : 

இதில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. மற்றும் விலையும் மலிவாக கிடைக்கக் கூடியது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின், பி, கே, போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பப்பாளி பழத்தை தினமும் உண்டு வந்தால் கண் பார்வை குணமாகும். மலச்சிக்கல் நீக்கக்கூடியது. குடல் புழுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கும். 

எலுமிச்சை பழம் :

இது உடல் சூட்டை குறைக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில், வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Low cast Fruits and Benefits in Tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->