நுரையீரல் சளி தொல்லையா... இதனை செய்தால் போதும் உடனே வெளியேறிவிடும்.!
lungs phlegm expel tips
நுரையீரல் பாதித்தால் இரும்பல், சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
அதே சமயத்தில் நமது உடலை பாதுகாக்க சளி பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது. சில பாக்டீரியா, வைரஸ் சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள சளியில் சிக்கிக் கொள்வதால் உடலுக்குள் செல்லாமல் இருக்கிறது.
பின்னர் தும்மல், இரும்பல், மூக்கு சளி மூலம் வெளியேறுகிறது. அதிகப்படியான சளி காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இதனை சரி செய்வதற்கு,
ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் இதனை தினமும் பருகி வந்தால் நுரையீரலில் உள்ள சளி கரைந்து வெளியேறும்.
மூச்சு விடுதல் பயிற்சி, உடற்பயிற்சி மூலம் நுரையீரலில் உள்ள சளி கரைந்து வெளியேற வாய்ப்புள்ளது. கொதிக்கும் நீரில் கற்பூரவள்ளி இலையை போட்டு ஆவி பிடித்தால் சளி கரைந்து விரைவில் வெளியேறும்.
தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பான பிறகு வாயில் ஊற்றி கொப்பளித்தால் நுரையீரல் ஆரோக்கியமடையும்.