ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த ''மாம்பூ''.! சாப்பிடுவதால் என்ன பயன்? - Seithipunal
Seithipunal


முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வாய்ப்புண், பல் வலி, பற்கள் ஈறுகளுக்கு வலிமை தருவதில் மாம்பூக்கள் சிறந்த மருந்தாக உள்ளது. வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த மாம்பூ தொண்டையில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும். 

மாம்பூக்களை சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் எலுமிச்சை சாறை பிழிந்து தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளித்தால் தொண்டை வலி குணமடையும்.

 உலர்ந்த மாம்பூக்களை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பித்தால் கொசு தொல்லை இருக்காது. மாம்பூ சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து அதில் இரண்டு சிட்டிகை சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூல நோய் கட்டுப்படும். 

உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கை மாம்பூ குணப்படுத்தும். உலர்ந்த மாம்பூக்களை பொடியாக செய்து மோரில் கலந்து மூன்று வேலை பருகினால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமடையும். மாம்பூ நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. 

மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவு எடுத்து காய வைத்து இடித்து காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் சேர்த்து பருகவும். மாம்பூ, மாதுளம்பூ, மாந்தளிர் அனைத்தையும் உலர்த்தி அரைத்து பசும்பாலில் கலந்து காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் சீதபேதி நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mango flower health benefits in tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->