நோய், நொடியை விரட்டும்.. மணமான சத்தான பூண்டு குழம்பு செய்வது எப்படி.?!
Poondu Kulambu Recipe in Tamil
தேவையான பொருட்கள் :
பூண்டு பல் -1கைப்பிடி
சின்ன வெங்காயம் - 1/4kg,
சீரகம் - 1/2ஸ்பூன்,
வெந்தயம் - 1ஸ்பூன்,
மிளகு - 1/2ஸ்பூன்,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
தக்காளி -1
மிளகாய் தூள்,
மல்லி தூள்,
புளி - 1 எலுமிச்சை அளவு,
வெல்லம் - சிறிதளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி பின் இந்த பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும்.
அது ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து அதனுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து, கடுகு வெடித்ததும் சின்ன வெங்காயத்தை இரண்டாக கட் பண்ணி போட்டு நன்றாக வதக்கவும்.
அதனுடன் பூண்டையும் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து கருவேப்பிலை சிறிதளவு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு இதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து வதங்கியவுடன், புளியை கரைத்து ஊற்றவும்.
ஐந்து நிமிடம் கொதி வந்த, பின்பு நாம் தனியாக எடுத்து வைத்த, வதக்கிய மசாலாவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதையும் இதில் சேர்த்து நன்றாக கிண்டவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு, எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட்டு, இறக்கும்போது சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறி, இறக்கவும். இப்பொழுது சுவையான பூண்டு புளி குழம்பு தயார்.!
English Summary
Poondu Kulambu Recipe in Tamil