'சிசேரியன்' மூலம் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு எளிதான 'பாட்டி வைத்தியம்'..!!
Simple Home Medicines May Follow After Cesarean Delivery
பெண்களுக்கு சுகப் பிரசவத்தை விட சிசேரியன் பிரசவத்தில் அதிக வலி மிகுந்திருக்கும். தையல் பிரிந்து விடக் கூடாது, தையலில் தண்ணீர் பட்டு விடக் கூடாது, அதிக கனமுள்ள பொருட்களை தூக்கக் கூடாது என்று ஜாக்கிரதையாக இருக்கும் பெண்கள் பலரும், உடலை முன்பு போல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிப்பதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
சிசேரியன் முடிந்து எப்போது கண் திறந்தாலும், உடம்பில் எஞ்சியுள்ள அனஸ்தீசியா மருந்தின் தாக்கத்தை முழுவதும் நீக்க உடனடியாக லெமன் ஜூஸை குடித்து விட வேண்டும்.
அடுத்து தாய் மயக்கத்தில் இருந்தாலும் கூட, பிரசவத்திற்குப் பிறகான முதல் சீம்பாலை குழந்தைக்கு கண்டிப்பாக கொடுத்து விடவேண்டும். இதுதான் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
சிசேரியன் வலி முற்றிலும் நீங்கும் வரை மருத்துவர் கொடுத்த மருந்துகளோடு நல்ல சத்தான , ஆரோக்கியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள உணவுகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
அந்தக் காலங்களில் பிரசவித்த பெண்ணுக்கு காரமில்லாமல் பூண்டுக் குழம்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சுக்கு களி, கீரைகள், காய்கறிகளுடன் பிரசவ மருந்து எனப்படும் நாட்டு மருந்து, ரத்த உற்பத்திக்கு இரும்புச்சத்துள்ள உணவுகள் என்று பாட்டிகள் கொடுப்பார்கள்.
மேலும் சிசேரியன் முடிந்தவர்கள் தும்மும்போதோ, இருமும்போதோ, சிரிக்கும்போதோ அடிவயிற்றை ஒரு கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தையல் பிரியாமல் இருக்கும். சிசேரியன் பிரசவத்திற்குப் பின் உடல்நலத்தை பாட்டிகள் கூறும் இந்த சின்ன சின்ன எளிய வைத்திய முறைகள், உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலமே எளிதாகப் பராமரிக்க முடியும்.
English Summary
Simple Home Medicines May Follow After Cesarean Delivery