இந்த கேள்வியையும் உங்கள் நல விசாரிப்பில் சேர்த்துக்கங்க!  - Seithipunal
Seithipunal


எப்படி இருக்கீங்க? உடம்பு நல்லா இருக்கா? ன்னு நம்ம எல்லோரும் மற்றவர்களைப் பார்த்ததும் நலம் விசாரிக்கிறோம். அந்த கேள்வியின் வரிசையில் உங்கள் மனநலம் இன்று எப்படி இருக்கிறது? என்றும் கேளுங்க!

உடல் நலனைப் போல் மனநலமும் மிக முக்கியமான ஒன்றாகும். இன்றையக் காலக்கட்டத்தில், உடல் நலனைப் பேணிக் காக்கிறார்கள் மற்றவர்களுக்கு உடல் நலனிலும் அக்கறை எடுத்து யோசனை கூறுகிறார்கள், ஆனால் மனநலத்தைப் பற்றி நெருங்கிய உறவினர்கள், மனதிற்கு நெருக்கமானவர்கள் என்று யாருமே அதைப்பற்றி யோசிப்பதற்கு, கேட்பதற்கு கூட யாரும் தயாரில்லை.

யாரேனும் மனதில் உள்ள எண்ணங்களை சொல்ல வந்தால் யாரும் காதுக்கொடுத்து கேட்பதற்கு கூட யோசிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கே ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இதில் இவர்களின் கதையை வேறு கேட்டு நம் மனதை அலட்டிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணம் பெரும்வாரியான மக்களுக்கு இருக்கிறது.

ஒரு மனிதனின்‌ மனநலம் தான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகள், சமுதாயத்திடம் அவர் நடந்துக் கொள்ளும் விதம் என்று நிறைய தன்னைச் சார்ந்த சுய முன்னேற்றங்கள், மற்றவர்களுக்கு உதவி செய்வது போன்ற சிறு விடையங்கள் முதல் பெரிய வெற்றி, தோல்விகள்   எனறு நிர்ணயிக்க உதவுகிறது.

ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் தினசரிக் காலையில் அல்லது மாலையில் உங்கள் அன்றைய மனநிலை எப்படி இருந்தது என்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உங்களின்‌ மன நிலையைப் பற்றி குறிப்பிட்டு பேசுவதால் உங்களுக்கே ஒரு‌ புரிதல் மற்றும் தெளிவு கிடைக்கும். மேலும் தன்னை மன நலனை பற்றி தெரிந்துக் கொண்டு உதவுவதற்கு நமக்கு துணையாக இருக்கிறார்கள் என்ற உற்சாகம் மனம் பெறுவதற்கு உதவுகிறது.

அடிக்கோடாக, உங்களின் இந்த கேள்வி கேட்கப்படுவதால் மற்றொருவரின் மனநிலையை உங்களால் புரிந்துக் கொள்வது மட்டுமில்லாமல், அந்த நபருக்கும், அதனால் தான் அன்று நாம் கோவப்பட்டோமோ?, எரிச்சலாக பேசினோமோ என்ற அவரின் மனநிலைப் பற்றி ஒரு புரிதல் கிடைக்க உதவியாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Start greeting others how is ur mental health?


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->