இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் சிறுநீர நோய்கள் இருக்க வாய்ப்புண்டு..!
Symptoms kidney disease
சிறுநீரக நோய்கள் பொதுவாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது சிறுநீரக நோய்களின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கு அதிக அளவில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், வயது முதிர்வு, குறைந்த எடை, சில மருந்துகளை நீண்ட காலம் உபயோகித்தல், நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக கற்கள் மற்றும் உடல் பருமன் ஆகியவையும் சிறுநீரக பாதிப்பின் காரணிகளாக பார்க்கப்படுகிறது. சிறுநீரக பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு கீழுள்ள பொதுவான அறிகுறிகள் தென்படும்.
தூக்கமின்மை :
சிறுநீரக பிரச்சனை உள்ளபவர்களுக்கு சிறுநீரகமானது சரியான முறையில் இயங்காததால் நச்சுக்களை வடிகட்ட முடியாமல் போகலாம் இதனால், நச்சுக்கள் உடலில் தங்கிவிடும் அபாயாம் உள்ளது. இதனால், தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது.
சரும பாதிப்புகள் :
சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சரும பாதிப்பு பொதுவான அறிகுறியாக இருக்கிறது. சருமத்தில் கடுமையான வறட்சி, அரிப்பு போன்றவை நீரிழப்பு மற்றும் எலும்பு பாதிப்புகளை உணர்த்தும் அறிகுறிகளாக கருதப்படுகிறது.
வீங்கிய கண்கள் :
சிறுநீரக பிரச்சனைகள் பெரியோர்பிடல் எடிமாவை ஏற்படுத்தும். இதனால், கண்கள் வீங்கி காணப்படும் . சிறுநீரகத்திலிருந்து அதிக அளவு புரதத்தை உடலில் வைத்திருப்பதற்கு பதிலாக சிறுநீர் வழியாக வெளியேற்றுவதன் காரணமாக கண்களின் வீக்கம் ஏற்படும்.
தசை பிடிப்பு :
உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி தசை பிடிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சிறுநீர் கழிப்பதில் மாற்றம் :
சிறுநீரங்கள் பிரச்சனை ஏற்படும் சிறுநீர் கழிப்பதில் மாற்றம் ஏற்படலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுவது, இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தல் போன்றவை சிறுநீரக நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இதனை தவிர்ப்பதற்காக தினமும் உடற்பயிற்சி தியானம் மற்றும் யோகா பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். தியானம் மற்றும் யோகா பயிற்சி முழு தானியங்கள்,பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.