உங்கள் காது குறைவாக கேட்குமா.? இது உங்களுக்கு தான்.!  - Seithipunal
Seithipunal


டிவி ஓடும் போது சத்தம் தெளிவாக கேட்கவில்லையா? யாரேனும்  உங்களை அழைத்தாலோ அல்லது உங்களிடம் ஏதேனும் பேசினாலோ அதை அவர்களிடம் திருப்பி சொல்ல சொல்கிறீர்களா? நீங்கள் மட்டும் தனியாக இல்லை இதுபோல் உலகெங்கிலும் ஏராளமான மக்கள் காது கேட்புத் திறன் குறைவு பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையானது எவ்வாறு ஏற்படுகிறது? இதை எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

பொதுவாக செவித்திறன் இழப்பு அல்லது குறைவது வயது மூப்பின் காரணமாக ஏற்படும். மேலும் அதிகமான சத்தத்தினை  தொடர்ந்து கேட்பதின் காரணமாகவும் நமது செவித்திறன் குறையக்கூடும். சிலருக்கு காதில் இருக்கக் கூடிய அதிகமான மெழுகின் காரணமாக அவர்களது காது சத்தத்துடன் ஆன தொடர்பை   இலக்க நேரிடும். நமக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டால் அதனை முற்றிலுமாக சரி செய்ய முடியாது. நவீன கருவிகளின் உதவியுடன் நம்மால் கேட்க முடியும்.

நமது செவித்திறனை அதிகரிக்க  அதிகமான சத்தங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சியோ அல்லது ஏதேனும் ஒரு இசைக்கருவியோ  குறைவான ஒலி அளவில் வைத்தே கேட்க வேண்டும். அதிகமான சத்தங்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் வரும் பொழுது இயர் பிளாக்  போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதிகமான ஈரப்பதம் நம் காதுகளில் தொற்றுக்களை ஏற்படுத்தி மெழுகுகள் அதிக அளவில் சேருவதற்கு வழிவகுக்கும். அவற்றை சுத்தம் செய்து எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான மெழுகுகள் காதில் சேர்வதை தடுக்கலாம்.

புகைப்பிடித்தல் நமது செவிப்புலன் திறனை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகும். நமது செவித்திறன் நன்றாக இருப்பதற்கு ரத்த ஓட்டம் மற்றும் ரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்சிஜனின் அளவு முக்கியம். புகை பிடிக்கும் போது இவற்றோடு சேர்ந்து நிக்கோட்டினும் உடலில் கலப்பதால் இவை செவிப்புலனை பாதிப்பதாக  ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இயற்கையான சூழல்களில் அமர்ந்து பறவைகளின் சத்தம், கடலின் சத்தம் என்று அடிக்கடி கேட்பதால் காதுகளின் கேட்புதிறன் புத்துணர்ச்சியடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips to improve your listening ability


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->