தர்பூசணி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?
watermelon health benefits
* தர்பூசணி பழத்தை நீரிழிவு நோய், இதய நோய், ரத்த கொதிப்பு, உடல் பருமனாக இருப்பவர்கள் சாப்பிடலாம். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
* தர்பூசணி பழச்சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் வெயிலில் ஏற்படும் வெப்பம் குறைந்து சூடு தணியும். தர்பூசணி பழத்தை பதநீரில் போட்டு பனிக்கட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அது மட்டுமல்லாமல் உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிறு வலி நீங்கும்.
* தர்பூசணியில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறையும். இதயத் துடிப்பு சீராகும்.
* சிறுநீர் கற்களில் இருந்து காக்கும். தர்பூசணி விதைகளை அரைத்து வெந்நீரில் சேர்த்து குடித்தால் சிறுநீரக கல் கரையும். தர்பூசணி பழச்சாறுடன் சீராக பொடி சர்க்கரை சேர்த்து அருந்துவதால் நீர் தாரை எரிச்சல் குணமாகும்.
* தர்பூசணி பழச்சாறுடன் பால் சேர்த்து அருந்தினால் தொண்டை வலி குணமடையும். கண்கள் குளிர்ச்சி அடையும். தர்பூசணி பழச்சாறுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசினால் முகம் பளபளவாகும்.
* தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், வைட்டமின் சி குறைபாடல் ஆஸ்துமா ஏற்படும் ஆஸ்துமாவை சரி செய்யும்.
English Summary
watermelon health benefits