பிக்பாஸ் சீசன் 7 - முதல் வாரத்திலேயே எலிமினேஷன் ஆன முக்கிய புள்ளி.! யார் அவர்? - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 7 - முதல் வாரத்திலேயே எலிமினேஷன் ஆன முக்கிய புள்ளி.! யார் அவர்?

தமிழில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் பிரம்மாண்டமாகத் தொடங்கியது. 18 பேருடன் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களிடையே ஏராளமான கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் முதல் வார நாமினேஷன் பட்டியலில் பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட ஏழு பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். பொதுவாக முதல் வாரத்தில் நாமினேஷன் நடைபெற்றாலும் எலிமினேஷன் நடைபெறாது.

இந்த நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்று இருந்தவர்களில் யுகேந்திரன் வாசுதேவன் மற்றும் அனன்யா ராவ் மற்றவர்களை காட்டிலும் குறைவான வாக்குகளை பெற்று இருந்ததால் அவர்களில் யாரேனும் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7-ன் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் கலந்து கொண்ட எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யுகேந்திரன் எவிக்ட்டாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

yukendiran leave from bigg boss season 7


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->