பாஜக வேட்பாளர்கள் "10 பேர்" போட்டியின்றி தேர்வு.!! - Seithipunal
Seithipunal


வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அருணாச்சலப் பரதேசத்தில் உள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது அன்றைய தினமே அருணாச்சலப் பிரதேசத்திற்கான சட்டமன்ற பொது தேர்தலும் நடைபெறுகிறது. 

மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய அருணாச்சல பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் தொடங்கி முடிவடைந்துள்ளது. 

நேற்று வேட்பமான மீதான பரிசீலனை நடைபெற்று முடிந்த நிலையில் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

அதில் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் ஹேமா காண்டு துணை முதல்வர் பத்து பாஜக வேட்பாளர்களை எதிர்த்து ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர்கள் அனைவரும் போட்டியினறி தேர்வு சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 BJP Candidates won uncontest in arunachal pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->