லக்னோ : ஹோட்டல் சமையல் அறையில் வெடி விபத்து - 10 பேர் காயம் - Seithipunal
Seithipunal


லக்னோவின் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவின் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள எம்போரியோ கிராண்ட் ஹோட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, சமையலறையில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தின் போது, ​​சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக லோக் பந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றுகூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 injured in explosion at hotel kitchen in lacknow uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->