காவலர் உடல்தகுதி தேர்வில் 10 பேர் பலி....குற்றம் சாட்டும் பாஜக!...மறுக்கும் காவல்துறை!....நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  ராஞ்சி,  பலாமு, கிழக்கு சிங்பும், கிரிதி, ஹசாரிபாக், சாகேப்கஞ்ச்   உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு தேர்வில் 10 பேர் உயிரிழந்ததற்கு பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் பாஜக  மாநில தலைவர் பாபுலால் மராண்டி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த தேர்வில் பங்கேற்றவர்கள் நள்ளிரவு முதல் வரிசையில் நிற்க வைக்கப்பட்ட நிலையில், அடுத்த நாள் காலையில் கொளுத்தும் வெயிலில்  ஓட வைக்கப்பட்டனர். காவலர் தேர்வு மையங்களில் போதிய சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று  குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் 10 பேர் பலியான சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று  பதிவிட்டுள்ளார்.  

இந்நிலையில், காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வில் சில மையங்களில் பங்கேற்ற ஒரு சிலர் துரதிர்ஷ்ட வகையில் மரணம் அடைந்து உள்ளனர் என்றும், இது தொடர்பாக  வழக்கு பதிவு செய்யப்பட்டு,விசாரணை நடைபெற்று வருவதாகவும், தேர்வின் போது  மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை அனைத்து மையங்களிலும் கிடைக்கும்படி உறுதி செய்யப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 killed in police fitness test BJP blames it Police denies it What happened


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->