திருப்பதி தேவஸ்தான கோசாலையில் 100 பசுக்கள் உயிரிழப்பு..? முன்னாள் அறங்காவலர் குற்றச்சாட்டு; உண்மையில் நடந்தது என்ன..?
100 cows die in Tirupati Devasthanam cowshed
திருமலை திருப்பதி தேவஸ்தானம், வெங்கடேஸ்வரா கோசாலையை நிர்வகித்து வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக கோயிலின் முன்னாள் அறங்காவலரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் சித்தூர் மாவட்ட தலைவருமான கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார்.
அத்துடன், பசுக்கள் இறந்தமை தொடர்பில் உண்மை என்ன என்பது பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கருணாகர ரெட்டி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், வெங்கடேஸ்வரா கோசாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்ததாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, அதில் கூறியுள்ளதாவது;
பக்தர்களையும், பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் தவறான தகவல்களை பரப்பப்படுவதை தேவஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது என்றும், பக்தர்கள் இது போன்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், இந்த குற்றசாட்டு தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கருணாகர ரெட்டியின் குற்றச்சாட்டை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நர லோகேஷ் மறுத்துள்ளார்.இது உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், இதில் உண்மை எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
100 cows die in Tirupati Devasthanam cowshed