வயநாடு நிலச்சரிவு : 100க்கும் மேற்பட்ட புலம் பெயர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மாயம்..?! - Seithipunal
Seithipunal



கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த புலம் பெயர் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வயநாட்டில் உள்ள முண்டக்கை பகுதியில் ஹாரிசன்ஸ் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டம் செயல்பட்டு வந்தது. இங்கு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுடன் சேர்த்து மொத்தம் 600 பேர் பணிபுரிந்து வந்துள்ளனர். 

இவர்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் 65 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள ஓடை அருகே உள்ள லைன் வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை பகுதியில் ஓடை அருகே உள்ள இந்த லைன் வீடுகள் அனைத்துமே நீரில் அடித்துச் செல்லப் பட்டன. 

இதையடுத்து தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து, அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. முண்டக்கை பகுதியை இணைக்கும் பாலம் உடைந்துள்ளதால், வெளியில் இருந்து யாரும் அந்த ஓடை அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது. 

முன்னதாக வெறும் 8 மீ நீளம் மட்டுமே இருந்த ஓடை நிலச்சரிவுக்குப் பின் தற்போது பெரிய ஆறு போல காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே வயநாட்டில் மீட்புப் பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன், ராணுவமும், கடற்படையும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 Plantation Workers Are Missing in Wayanad Landslide


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->