10,12 -ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு..! - Seithipunal
Seithipunal


இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை தொடங்கியுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான அதிகாரப்பூர்வ, aai.aero என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதி ஆகும். மொத்தம் 156 காலி பணியிடங்கள் உள்ளன.
இளநிலை உதவி (அலுவலகம்) 10 
இளநிலை உதவி (தீயணைப்பு பிரிவு) 132 
முதுநிலை உதவி (அலுவல் மொழி) 1 
முதுநிலை உதவி (கணக்காளர்) 13 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், வெவ்வேறு பதவிகளுக்கு வெவ்வேறு கல்வி தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில், விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்  என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இவர்களுக்கு அவர்களின் பதவிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.அதாவது,

இளநிலை உதவி (தீயணைப்பு பிரிவு) ரூ.31 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை 
இளநிலை உதவி (அலுவலகம்) ரூ.31 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை
முதுநிலை உதவி (கணக்காளர்) ரூ.36 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை
முதுநிலை உதவி (அலுவல் மொழி) ரூ.36 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10,12 students work application for Air Transport Corporation of India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->