12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் இன்று சட்டசபை கூடியது. கூட்டம் கூடிய உடனே சமீபத்தில் இருந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதன்பின், சபையின் மையப்பகுதிக்குள் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.

அதாவது, கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்களும், பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எஸ்.டி, எஸ்.சி மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பி.ஜே.டி. எம்.எல்.ஏக்களும் கோரிக்கை விடுத்தனர். 

மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்ககோஷங்கள் எழுப்பியும், பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதைத் தொடர்ந்து சபாநாயகர் பல முறை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். இந்த நிலையில், சபாநாயகர் சுராமா பதேய் சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 congrass mlas suspend in odisa assembly


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->