மார்ச் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!
12 days holiday in March month reserve Bank of India announced
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, மார்ச் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.
2023 மார்ச் மாத வங்கிகளுக்கான விடுமுறை பட்டியல்:
மார்ச் 3-வெள்ளிக்கிழமை -சாப்சார் குட் (மணிப்பூர்)
மார்ச் 5 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 7 -செவ்வாய்-ஹோலி
மார்ச் 8-புதன்கிழமை (துலேட்டி/டோலியாத்ரா/ஹோலி/யோசங்)
மார்ச் 9 -வியாழக்கிழமை-ஹோலி (பீகார்)
மார்ச் 11 -2வது சனிக்கிழமை
மார்ச் 12 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 19 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 22 - புதன்கிழமை (குடி பத்வா/உகாதி பண்டிகை/பீகார் திவாஸ்/சாஜிபு நோங்மபான்பா (செய்ரோபா)/தெலுங்கு புத்தாண்டு தினம்)
மார்ச் 25 -4வது சனிக்கிழமை
மார்ச் 26 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 30, வியாழக்கிழமை (ஸ்ரீ ராம நவமி)
விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
English Summary
12 days holiday in March month reserve Bank of India announced