அடி பம்பை அடித்தால் தண்ணீருக்கு பதில் சாராயம்.. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டம் சஞ்சோடா, ரகோகர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ள சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிகளில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் அடிபம்பு ஒன்று இருந்ததை பார்த்த போலீசருக்கு அதன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அடி பம்பை போலீசார் அடித்து பார்த்தபோது தண்ணீருக்கு பதில் சாராயம் வந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து அடிபம்பு கீழ் உள்ள நிலத்தை தோண்டிய போது சுமார் 7 அடி ஆழத்தில் பிளாஸ்டிக் பேரல்களில் சாராயத்தை நிரப்பி புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் தேவைப்படும் போது அடி பம்பு மூலம் அடித்து விற்பனை செய்துள்ளனர்.

இந்த நிலையில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரல்களில் இருந்து 400 லிட்டர் உட்பட மொத்தம் 1200 லிட்டர் கள்ளச்சாரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1200 litres alcohol ceased in madhya pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->