#BREAKING || பஞ்சாப் வந்த விமானம்., 125 பயணிகள்., சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி.!
125 passengers of Air Indias Italy Amritsar flight
அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 125 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் கடந்த 10 நாட்களில் கொரோனா நோய்த்தொற்று பரவளின் தீவிரம் அதிவேகம் எடுத்துள்ளது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்-க்கு வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இத்தாலி நாட்டிலிருந்து வந்த அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பரிசோதனையின் முடிவில் பயணிகள் 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
ஒரே விமானத்தில் பயணம் செய்த 125 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
125 passengers of Air Indias Italy Amritsar flight