ஒரே நாளில் 12,591 பேர் பாதிப்பு.. 65,000 மேல் ஆக்டிவ் கேஸ்கள்.. இந்தியாவை பதம் பார்க்கும் கொரோனா..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று முன்தினம் இந்தியாவில் 7,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று இந்தியா முழுவதும் 10,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 12,591-ஆக பதிவாகியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 65,786 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100 கடந்தது. நேற்று மட்டும் 116 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12591 people affected by Corona in India at last 24hours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->