அடுத்தடுத்து நடக்கும் உயிரிழப்புகள் - ஒரே மாதத்தில் 14 பேர் பலி.! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள ரோகினி பகுதியில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆஷா கிரண் தங்கும் விடுதியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரைக்கும் 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆஷா கிரண் காப்பகத்தில் உள்ள நீரின் தரத்தை பரிசோதிக்கவும், கழிவுநீர் குழாய்களின் நிலையை ஆய்வு செய்யவும் டெல்லி நீர்வளத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:- "குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தற்செயலாக இருக்க முடியாது. எண்ணிக்கையில் 14 இறப்புகள். 

இந்த வழக்கினை மேலோட்டமாகப் பார்த்தால், அனைத்து இறப்புகளும், நோயாளிகள் காசநோயால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டதை காட்டுகிறது. டெல்லி நீர்வளத்துறை உடனடியாக அங்குள்ள தண்ணீரின் தரம் மற்றும் கழிவுநீர் குழாய்களின் நிலை ஆகியவற்றைப் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தங்குமிடத்தின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி அரசின் சமூக நலத்துறை செயலாளருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தங்கும் விடுதியில், மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 peoples died at one month in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->