சுயேட்சை எம்.எல்.ஏ. ராஜினாமா..கேரள அரசியலில் பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பி.வி. அன்வர், இன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவை வழங்குவதாகவும் அன்வர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 2016 மற்றும் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் நீலம்பூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர்தான்  அன்வர், பல விஷயங்களில் ஆளும் கூட்டணிக்கு எதிராக செயல்பட்டார் என்பதற்காக  அவருடனான உறவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துண்டித்தது . இதனால் கேரளா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது,அதன்பின்னர் அன்வர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள ஜனநாயக இயக்கத்தை (DMK) உருவாக்கினார் .

இதையடுத்து கேரள மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பி.வி. அன்வர், இன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் ஏ.என். ஷம்சீரை நேரில் சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.இதனால் கேரளா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அன்வர்,அவர் ராஜினாமா செய்ததால் நீலம்பூர் தொகுதி காலியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவை வழங்குவதாகவும் அன்வர் தெரிவித்துள்ளது கேரளா அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், அவரது தொகுதியில் யானை தாக்கி பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் இறந்ததை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது வனத்துறை அலுவலகத்தை சேதப்படுத்தியதாக அன்வர்கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக அன்வர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Independent MLA Resigns Kerala politics in turmoil 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->