அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ புதுச்சேரி மாநில OPS அணி பொங்கல் வாழ்த்து!
Puducherry OPS Team Wishes Happy Pongal
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனஅதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு ஓம்சக்தி சேகர் அவர்களின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு ஓம்சக்தி சேகர் அவர்களின் பொங்கல் வாழ்த்து செய்தியில் .உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் இந்த இனிய பொங்கல் நன்னாளில் மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலமிட்டு, கொத்து மஞ்சள் குலைகள் கட்டி, தித்திக்கும் கரும்பு, காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு புதுப்பானையில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கி வரும் பொது "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்சிக் குரல் எழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"
என்ற குறளில் வள்ளுவப் பெருந்தகை உழவுத் தொழில் செய்து வாழ்கின்றவரே சுய சார்போடு வாழ்கின்ற பெருமை உடையவர்கள் என்னும் பொருள் பட உழவுத் தொழிலின் மேன்மையினை உலகத் தோருக்கு உணர்த்தியுள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க உழவர் பெருமக்கள் தமது வேளாண் நிலங்களில் சாகுபடி செய்யும் விளைப் பொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனை வணங்கியும், தம்மோடு சேர்ந்து உழைத்து தம் வருமானத்திற்கு அச்சாரமாக திகழ்கின்ற கால்நடைகளுக்கு தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாளாகும்.
இந்நாளில் புதுவை மக்கள் அனைவரும் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்தி இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் OPS அவர்களின் வாழ்த்துக்களோடுபொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என புதுச்சேரி மாநில அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு ஓம்சக்தி சேகர் அவர்களின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். .
English Summary
Puducherry OPS Team Wishes Happy Pongal