பெரும் சோகம்!கேரளாவில் நிபா வைரஸ்க்கு 14 வயது சிறுவன் பலி! மக்களே உஷாரா இருங்க! - Seithipunal
Seithipunal


கேரளாவில் நிபா வைரஸ்க்கு 14 வயது சிறுவன் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில், தற்போது அந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டியகொடுபஞ்சாயத்தை சேர்ந்த 19 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர் சிறுவனின் உமிழ் நீர் மாதிரியே எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு நிபா  வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது தொடர்பாக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அவனது நிலை கவலைக்கிடமாக தொடர்ந்து இருந்தது. மருத்துவர் குழு தீவிரமாக கண்காணித்து வந்து, பல்வேறு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் தற்போது பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிபா வைரஸ் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து சிறுவனின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த அனைவரையும் சோதனைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அனகாயம் ஊராட்சியில் சுகாதார குழு முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் ஆறாண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிபா வைரஸ் தலை தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிபா வைரஸுக்கு 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 year old boy died of Nipah virus in Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->