மாடுகளால் நடந்த விநோதம் - தெலுங்கானாவில் 144 தடை உத்தரவு.!
144 imposed in telangana for two gangs clash
தெலுங்கானா மாநிலம் மெடாக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக இரு சமூகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றியதால் இரு பிரிவினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அந்த பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே இடத்தில் நான்கிற்கும் அதிகமானோர் ஒன்று கூட அனுமதி இல்லை. இந்தத் தடை உத்தரவின் மூலம் பிரச்சினை உள்ள பகுதிகளில் வன்முறை தலைதூக்குவதை தவிர்க்க முடியும்.
இதுவரைக்கும் இந்த மோதல் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதையடுத்து, அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் பி பாலா சுவாமி தெரிவித்துள்ளதாவது:- "மோதல் ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
English Summary
144 imposed in telangana for two gangs clash