மொரீசியஸ் புறப்பட்ட பிரதமர் மோடி! 2 நாள் அரசு முறை பயணத்தின் காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மொரீசியஸ் நாட்டின் 57வது தேசிய தின கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக  விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இது குறித்து அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது," நாளை முதல் நான் மொரீசியஸ் நாட்டுக்கு 2 நாள் பயணமாக செல்கிறேன். 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கிறேன். எனது நண்பரும், பிரதமருமான டாக்டர் நவின்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அங்கு வசிக்கும் இந்திய மக்களுடன் உரையாட மிகவும் ஆவலாக உள்ளேன்.மொரீசியஸ் நாடு நம்முடன் கடல்சார் துறையில் நெருங்கிய கூட்டாளி. நாம் ஆழமான கலாசார உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளோம். எனது வருகை இந்தியா-மொரீசியஸ் நாடுகள் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தையும் நெருக்கத்தையும் உருவாக்கும்" என அவர் பதிவிட்டுள்ளார் .

மேலும் பிரதமர் மோடி நாடுகள் நட்பு-இணைப்பிற்காக அவ்வப்போது இதுபோன்ற பயணங்களை மேற்கொள்கிறார். பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும்,அவர் நோக்கம் என்னவோ நல்வழியில் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi leaves for Mauritius What the reason for the 2 day official visit


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->