இந்தியாவிற்கு வரவிருக்கும் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி!!! காரணம் என்ன?
US intelligence director Tulsi gabbard is coming to India What is the reason
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் அமெரிக்க உளவுத்துறை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் துளசி கப்பார்ட் , இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு வருகைத் தர இருக்கிறார்.
மேலும் இது அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவரின் முதல் வருகையாகும்.இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துளசி கப்பார்ட்:
அதில் அவர் கூறியிருப்பதாவது,"நான் இந்தோ-பசிபிக் பகுதிக்குப் பல நாடுகள் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
நான் ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தியாவுக்குச் செல்வேன்.மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் வழியில் பிரான்சிற்குச் செல்ல உள்ளேன். அதிபர் டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம். பல்வேறு நாட்டு தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
US intelligence director Tulsi gabbard is coming to India What is the reason