கர்நாடக தேர்தல் முடிவு எதிரொலி.. பெங்களூருவில் 144 தடை உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மை நிரூபிக்க 113 தொகுதிகள் தேவைப்படுவதால் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

இதன் காரணமாக முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கிங்மேக்கராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் அருகில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் நிற்கக்கூடாது.

திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் ஆயுதங்கள் கொண்டு செல்லவோ, பட்டாசு உட்பட வெளி பொருட்கள் பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உருவகம எரித்தால் இசை கச்சேரி நடத்துவது சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியாக உள்ளதால் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்கு என்னும் மையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

144 Prohibitory Order has been issued in Karnataka state


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->