16 வயது பெண் பலாத்காரம் செய்த 5 நபர்கள்..வீடியோ எடுத்து மிரட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ மகன்.! - Seithipunal
Seithipunal


16 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ-வின் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள 16 வயது பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்தப் பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள தௌசாவுக்கு அழைத்துச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண் இந்த பலாத்கார சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது என்றும் அந்த நபர்கள் மிரட்டியுள்ளனர்.

மேலும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு இந்த விஷயம் வெளியே தெரிந்தால் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவோம் என்று கூறி அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். இதனால் அந்தப் பெண் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த 5 நபர்களில் ஒருவர் வேறொரு வழக்கில் சிக்கிய போது இந்த பலாத்கார சம்பவம் அந்தப் பெண் மூலம் வெளியே வந்துள்ளது. இதனால் போலீசார் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 year old girl raped 5 members in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->