அடிக்கடி செல்போனில் மகள் செய்த செயல்.. ஆத்திரமடைந்து தந்தை கொலை.!  - Seithipunal
Seithipunal


செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த 17 வயது சிறுமி தந்தையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் பகுதியில் இருக்கும் முஷீராபாத்தில் சாதிக் என்ற நபருக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அதிகப்படியாக செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். எப்போதும் மகள் செல்போனே கதி என்று கிடப்பதால் பலமுறை சாதிக் அவரை எச்சரித்துள்ளார்.

ஆனாலும், தந்தையின் எச்சரிப்பை பெரிது படுத்தாத மகள் வழக்கம் போல செல்போனை உபயோகித்துக் கொண்டும், அதிகப்படியாக செல்போனில் பேசிக் கொண்டும் இருந்துள்ளார். சம்பவ தினத்தன்று இதுபோல அந்தப் பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

இதை சாதிக் தட்டி கேட்டுள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த சாதிக் அவரை கழுத்தை நெறித்து கொண்டுள்ளார். மகளை கொன்றுவிட்டு தானாகவே காவல் நிலையத்திற்கு சென்று சாதிக் சரணடைந்துள்ளார். பெற்ற மகளையே சாதிக் கொலை செய்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years Hyderabad girl Murdered by father


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->