டெல்லி சட்டசபைத் தேர்தல் - ரூ.194 கோடி பணம் பறிமுதல்.!
194 crores money seized in delhi
நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் வரும் 8 தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இதற்கிடையே மாநிலம் முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் குறித்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்ததாவது:- "சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், ரூ.194 கோடி மதிப்புள்ள ரொக்கம், மது பாட்டில்கள், இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரைக்கும் 6 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதன் மீது சராசரியாக 36 நிமிடங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சி-விஜில் செயலி மூலம் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அமலாக்கத்துறை அதிகாரிகள் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
English Summary
194 crores money seized in delhi