சர்வதேச எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற வங்காளதேச கடத்தல்காரர்கள் 2 பேர் சுட்டுக் கொலை.! - Seithipunal
Seithipunal


சர்வதேச எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற வங்காளதேச கடத்தல்காரர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காளம் கூச்பெஹார் மாவட்டம் காய்மரி என்ற இந்தோ-வங்காளதேச சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வங்காளதேசத்தில் இருந்து வாகனம் ஒன்றில் 20 பேர் கொண்ட கும்பல் கால்நடைகளை கடத்தி கொண்டு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். 

இதைப் பார்த்த பாதுகாப்பு பாடையினர், சட்டவிரோதமாக சர்வதேச எல்லை பகுதியில் ஊடுருவலில் ஈடுபட முயன்ற அவர்களை திரும்பி செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் முன்னேறி வந்ததால் படையினர் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. 

ஆனால் அவர்கள் மூங்கில் கம்புகள், ஆயுதங்களுடன் படை வீரர்களை தாக்க வந்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டி கல்வீச்சிலும் ஈடுபட்டதால், தற்காத்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

இதில் கடத்தல் கும்பலில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்து உள்ளார். மேலும் மற்றவர்கள் அங்கிருந்து தொப்பி சென்றுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Bangladeshi smugglers tried to enter the international border shot dead


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->