பட்ஜெட் 2025: அணு மின் திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு..! - Seithipunal
Seithipunal


2025 ஆம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அணுசக்தி திட்டத்திற்கு, 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது மின் உற்பத்தி திறன் 462 ஜிகா வாட் ஆக உள்ளது. அதில் அணுசக்தி மின் உற்பத்தி திறன், 8 ஜிகாவாட் ஆக உள்ளது. 

விக்ஷித் பாரத் திட்டத்தின் கீழ் 2047க்குள் 100 ஜிகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அணுசக்தி துறையில், தனியாரை பங்கேற்கச் செய்ய அணுசக்தி சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்து சிறிய அணு உலைகள், 2033-க்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் மற்றும், மின்சார வினியோக சீர்திருத்தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மொத்த மாநில உற்பத்தியில் 0.5 சதவீதம் கூடுதலாக கடன் வாங்க அனுமதி வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 20000 crore allocated for the nuclear power project


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->