அங்கன்வாடி மையத்தில் வெடித்து சிதறிய குக்கர்.! 2 குழந்தைகள் உட்பட 3 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் அங்கன்வாடி மையத்தில் குக்கர் வெடித்து சிதறியதில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் படகி வஸ்தி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வழக்கம்போல் நேற்று உதவியாளர் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென குக்கர் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகள் பீதியில் அலறியடித்து ஓடினர். இந்நிலையில் இந்த விபத்தில் அங்கன்வாடி மையத்தில் இருந்த சமர்த்(4), அத்விக்(3) மற்றும் உதவியாளர் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜமகண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜமகண்டி போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 children including 3 injured in Cooker exploded in Anganwadi centre in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->