கொடூர விபத்து! திடீரென 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் பலி! - Seithipunal
Seithipunal


டெல்லியில் கனமழை காரணமாக திடீரென 2மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. பருவ மழை தொடங்கியுள்ளதால் கேரளா, தமிழ்நாடு, டெல்லி, உத்திரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில் கனமழை கூட்டி தீர்த்து வருகிறது.

டெல்லியில் இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்து வருகிறது. என்சிஆர், நோய்டா உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியின் வட மேற்கு உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் பிற்பகல் இரண்டு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென  இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்டு படையினர் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 storey building collapses suddenly due to heavy rains in Delhi 3 people died miserably


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->